அவனும் நானும்

அவனும் நானும்...
ஒன்றாய் வளர்ந்தோம்
சேர்ந்தே சாப்பிட்டோம்
சண்டையிட்டோம்
சமாதானம் செய்தனர் பெற்றோர்...

பருவம் எய்தினேன்
தடைவிதிக்கப்பட்டது
சேர்ந்தே விளையாட....
பேச மட்டுமே அனுமதி...

அதுவும் தடைப்பட்டது
திருமண வயது எட்டியதும்....

காரணம் கூறினர்
காண்பவர் தவறாக எண்ணுவரென்று....

ஆணும் பெண்ணும் நட்பு கொண்டால்
கேலி கூத்தாக்குவதோ....?

உண்மை நட்பு ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை
பண்பும் ஒழுக்கமும் கொண்ட நட்பில் தீங்கில்லை
பார்ப்பவர் கண்களில் உண்மை தெரிவதில்லை...
அதனாலே வளர்வதில்லை நட்பு...!
அது முற்றிலும் முறிந்து விடுகின்றது
திருமணத்திற்கு பின்....

எழுதியவர் : நித்யஸ்ரீ (22-May-17, 11:57 pm)
Tanglish : avanum naanum
பார்வை : 281

மேலே