மன்னிப்பாயா

எழுதப்படாத வலிகளில் எங்கேயோ தொலைந்து
போனது உன் அன்பின் ஸ்பரிசம்...
தடம் மாறி போன போதெல்லாம்
உரிமையாய் கோபித்து கொள்வாயே..
மறுமுறை மன்னித்து விடு அன்பே
என் மொத்த காதலும் அன்பும் உன்னை சேரும் நாள் வெகு
தூரம் இல்லை ...
மன்னிக்க பழகு
அதுவும் காதலுக்கு அழகு ...
குறை கண்டுபிப்பதிலே
உன் கொள்ளை சிரிப்பும் உன் குறையாத அன்பும்
காணாமல் போகிறதடி,,,
சந்தேக படும் போதெல்லாம்
சத்தமில்லாமல் நம் சந்திப்புகள் குறைகின்றதே,,
வேண்ட வெறுப்பை இருந்தால் உமிழ்ந்து விடு...
முரு முறை மன்னித்து என்னோடு வாழ்ந்து விடு...

எழுதியவர் : சக்தி_SIVA (2-Jun-17, 9:08 am)
சேர்த்தது : சிவா
Tanglish : mannippaayaa
பார்வை : 1802

மேலே