பிணஅறை மோச்சரி

பிணஅறை (மோச்சரி)

உயர்நதவர், தாழ்ந்தவர், சாதி, மத, அந்தஸ்து பேதமின்றி துயிலும் இடம். இடுகாடு. அதே போன்று குளிர் பெட்டிகளில் பிரேதங்கள் இடுகாட்டை நோக்கி பயணிக்க முன் துயிலும் இடம் பிணஅறை. இக்கதை பிணவறையில் பிரேதங்களைப் பாதுகாக்கும் மாரிமுத்து என்ற தொழிலாளி பற்றிய கதை.

மாரிமுத்து தந்தை செல்லமுத்து கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி பிண அறையில் உதவியாளனாகப் பல வருடங்கள் வேலை பார்த்தவன். பிரேத பரிசோதனையின் போது டாக்டருக்கு உவியாளனாக வேலைசெய்தவன். பரிசோதனையுக்கு தேவைப்படும் கருவிகள் கூர்மையாக தூய்மைப்படுத்தி உடலை வைப்பதுக்கு மேசையை தயார் செய்வது அவன் வேலை. காலையில் இருந்து வேலை முடியும் வரை அவன் சந்திப்பது’ பல வித ஆணும் பெண்மாக பல வயதில் சடலங்கள்.

அவனது ஒரே மகன் மாரிமுத்து. முத்து ஆறடி தொற்றமுள்ளவன். ஓரளவுக்கு அழகிய முகம். பார்வையில் எபோதும் ஒரு பயங்கரம், அனால் அமைதியானவன். தேவை இல்லாமல் எவோரோடும் வாக்கு வாதத்துக்குப் போகமாட்டன். அவனோடு படித்த நண்பர்களான சுந்தரமும், சந்திரனும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மற்றைய மாணவர்கள் மாரிமுத்துவின் தந்தை செய்யும் தொழில் அறிந்து அவனோடு பழகுவது குறைவு.

சுந்தரத்தின் தந்தை, செல்லமுத்து வேலை செய்யும் மொச்செரியில் பிரேத பரிசோதனை செய்யும் டொக்டர் சிவநாதன். சந்திரனின் தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் அடிகடி கேஸ் விஷயமாக மோர்ச்சரிக்கு வருவதுண்டு,

மாரிமுத்து படித்த வகுப்பில் அவனின் தந்தை மட்டுமே குறைந்த சம்பளத்தில் பலர் ஏளனமாக கதைக்கும் தொழில் புரிபவன். மாரிமுத்துவின் தந்தையின் தொழில் அறிந்து சுந்தரத்தையும் சந்திரனையும் தவிர்த்து மற்றைய மாணவர்கள் விலகி இருந்தனர். அதிலும் தன் மகன் தன்னைப்போல் பலர் இழிவாகக் கருதும் தொழிலுக்கு போவதை செல்லமுத்து விரும்பவில்லை. அவன் படித்து ஆசிரியனாகவோ அல்து அரசாங்கத்தில் கிளார்காககோ அல்லது போலீஸ்காரனாகவோ வரவேண்டும் என்பது அவன் விருப்பம்.

மாரிமுத்து படிப்பில் சுமார் ஆனல் தமிழ், சிங்களம். ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் சரளமாக பேசுவான். வாசிப்பான். விளையாட்டு வீரனும் கூட அதுவே அவனுக்கு பல முஸ்லீம் சிங்கள மக்கள் இடையேயும் நல்ல உறவு இருந்தது. ஏ லெவல் பரீட்சையில் சாதாரண சித்திபெற்றதால் மேலும் பல்கலை கழகத்துக்கு சென்று படித்து பட்டதாரியாக அவனால் முடியவில்லை.

தந்தைக்கு ரிட்டயராக இன்னும் ஒரு வருடம்] இருந்ததால் மாரிமுத்து பல வேலைகளுக்கு விண்ணப்பித்தான். விண்ணப்பித்த சில வேலைகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்ற போது. அவர்கள் கேட்ட முதல் கேள்வி தந்தையின் தொழில்பற்றியது. அவர்கள் கேட்ட கேள்விக்கு மறைக்காமல் தன தந்தை பெரிய வைத்தியசாலையில் மோச்கரி உதவியாளனாக வேலை செய்கிறார் என்று சொன்னதும். கேள்வி கேட்வர்கள் முகம் போன கோணத்தை அவன் கவனிக்கத் தவறவில்லை. தன் தந்தை செய்யும் தொழில் தன் வருங்காலத்துக்கு முடுக்கட்டையாக இருக்குறது என்பதை அவன் உணர வெகு நாட்கள் எடுக்கவில்லை.

செல்லமுத்துவுக்கு தன் மகன் பல வேலைகளுக்கு விண்ணப்பித்து ஒன்றும் சரி வராததையிட்டு பெரும் கவலை. அதன் காரணத்தை மாரிமுத்து தகப்பனுக்குச் சொல்லவில்லை .

“மாரி நான் இந்த வருடத்தோடு ஓய்வு பெற இருக்கிறேன். முப்பது வருஷ சேவை. இந்த தொழிலுக்கு ஏன் வந்தேன் என்றாகி விட்டது. நீ வேலை செய்யாவிட்டால் வீட்டுக்கு வருமானம் போதாது.”செல்லமுத்து மகனுக்கு சொல்லி குறைப்பட்டான்.

“ஏன் அப்பா அப்படி சொல்லுறியல். சமூகத்துகு நல்ல சேவைதானே செய்கிறீர்கள். உங்களைபோல் சாக்கடை சுத்தம் செய்பவனும் குப்பை அள்ளுபவனும் சமூக நலத்துக்காக தொழில் செய்பவர்கள் தானே அப்பா”

“நான் செய்யும் தொழில் பற்றி கேட்டு எல்லோரும் முகம் சூழிக்கிரார்கள். தூர விலகி நிட்கிறார்கள். அசுத்தமான தொழில் என்பது அவர்கள் எண்ணம்”

“சுத்தமோ. அசுத்தமோ எல்லாம் மனதில் தங்கியுள்ளது. நான் உங்கள் தொழில் செய்ய விண்ணப்பிக்க யோசிதிருக்கிறேன். உங்கள் அதிகாரியிடம் என்னை சிபார்சு செய்ய முடியுமா அப்பா”? மாரிமுத்து தந்தையைக் கேட்டான்.
தன் மகன் அப்படி தன்னைக் கேட்பான் என்று செல்லமுத்து எதிர்பார்க்கவில்லை.

“மாரி நீ என்ன சொல்லுகிறாய்?. உனக்கு உண்மையாக என் தோழில் செய்ய விருப்பமா?.

“செய்யும் தொழிலே தெய்வம் அப்பா”

“நான் செய்யும் தொழிலையே நீ செய்ய விரும்புகிறாய் என்றால் என் அதிகாரியோடு அதை பற்றி பேசுகிறேன். எனது ஓய்வுக்குப் பின் அந்த வேலையை உனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டுப்பார்க்கிறேன். நீ சில சமயம் வொலன்டியராக எனக்கு மோச்சரியில் உதவியிருக்கிறாய் என்று அவருக்குச் சொல்லுகிறன். அந்த அனுபவம் உனக்கு உண்டு என்கிறேன்”

“முதலில் மோச்சரியில் வேலை கிடைத்தால் போதும் அப்பா வேலை செய்த படியே, நான் படித்து வேறு வேலை தேட யோசித்திருக்கிறேன்.”

“அது சரி நீ காதலிக்கும் சித்திரா டீச்சரோடு இதைப் பற்றி பேசினியா. அவள் என்ன சொன்னாள்”?

“அப்பா இதெல்லாம் நான் அவளுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவள் உண்மையில் என்னைக் காதலிக்கிறாள் என்றால் நான் என்ன தொழில் செய்தால் அவளுக்கு என்ன? என் தொழிலையா அவள் திருமணம் செய்ய போகிறாள்” மாரிமுத்து தந்தையைக் கேட்டான்.

“சரி உன் விருப்பப் படி என் அதிகாரியிடம் கேட்கிறேன். உன்னை பற்றி விபரத்தைத் தா. ஆனால் ஒன்றுமட்டும் சொல்ல விரும்புகிறேன். இது ஒரு ஆரோக்கியமற்ற தொழில். தினமும் பல விதமான இறந்த உடல்களோடு தான் உனக்கு தொடர்பு இருக்கும்“

“அதைப் பற்றி யோசிக்கவேண்டம் அப்பா. தொழில் கிடத்தால் சரி. அதுவும் அரசாங்கத்தில் வேலை. சில சமயம் உங்களுக்கு பிணத்தைச் சரியாக தயாரித்து, பாதுகாத்து கொடுப்தகு பலர் பணம் தருவதாகச் சொன்னது எனக்கு நினைவு இருக்கிறது”

“அது எபோதும் வரும் என்று எதிர்பார்க்காதே”

“சரி அப்பா மோச்சரியில் எனக்கு வேலை கிடைத்தால் அது போதும்”

செல்லமுத்து மகனிடம் அவனது கல்வி, அனுபவம் அடங்கிய விண்ணப்ப பத்திரத்தை வங்கிக் கொண்டார்.
******

செல்லமுத்து பல வருடங்கள் மொச்சரியில் வேலை செய்ததால் மொச்சரிக்கு பொறுப்பான அதிகாரியின் சிபார்சினால், மாரிமுத்துவுக்கு ஆஸ்பத்திரியின் மேலிடம், மொச்சரி அசிஸ்டனட் வேலை கொடுத்தது.

தனக்கு வேலை கிடைத்ததை தெரிவிக்க தன் காதலி சித்திரா சந்திக்க பிச்சுக்கு சென்றான் மாரிமுத்து. சித்ராவுக்கு மாரிமுத்துவை பல காலம் தெரியும். அவனின் நண்பன் சுந்தரத்தின் தூரத்துச் சொந்தக்காரி. சுந்தரந்தின் வீட்டில் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சித்திரா அறிமுகமானாள். மாரியின் தோற்றமும், அமைதியான பேச்சும் அவளைக் கவர்ந்தது. முதலில் மாரியின் தந்தை செய்யும் தொழில் அறிந்து சற்று நெருங்கி பழகத் தயங்கினாள்.
ஒரு சமயம் நேரடியாகவே மாரியின் தந்தை செய்யும் தொழிலை அவனும் செய்ய கனவிலும் நினைக்கக் கூடாது என்று தன் கருத்தைச் சொன்னாலள்.

“இங்கை பார் சித்திரா நீ என்னையா என் தொழிலைய காதலிக்கிறாய்? அந்தஸ்துக்காக நீ என்னை காதலிப்பதானால் எனை மறந்து விடு” நேரடியாகவே மாரி சித்ராவுக்கு சொன்னான்.

“இல்லை மாரி உன்தோற்றதுக்கு போலீசில் கொன்ஸ்டபிலாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அதோடு நீ ஒரு வொலிபோல், குத்துச்சண்டை, விளையாட்டு வீரன் . அதனால் நிச்சயம் போலீசில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு“, தன் மனதில் உள்ளதை வெளிபடையாகவே சித்திரா சொன்னாள்.

பீச்சில் சித்திராவை சந்தித்து தனக்கு மொச்சரியில் தகப்பன் செய்த வேலை கிடைத்ததை மாரிமுத்து சொன்ன போது, எதை அவள் எதிர்பார்கவில்லையோ அது நடந்தது அவளுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவள் தன் மகிழச்சியைக் காட்டாது முகத்தை கோணிக்கொண்டாள். அதன் பின் அவள் ஒரு வார்த்தை கூட மாரியோடு பேசவில்லை. அதுவே அவர்களின் கடைசி சந்திப்பு. மொச்சரியில் வேலை செய்ய ஆரம்பித்தபின் பல் தடவை சித்திரவை சந்திக்க மாரி முயன்றும் பலன் கிட்டவில்லை. பிறகு ஒரு நாள் அவன் நண்பன் சந்திரன் சொல்லி அவனுக்கு தெரியவந்தது, சித்திரா மாறுதலாகி மட்டக்களப்புவுக்குச் சென்றுவிட்டதாக. சில காலம் மனம் குழம்பி இருந்த மாரியின் மனதை தேற்றியவர்கள் சுந்தரமும் சந்திரனுமே.

மாரிமுத்துவோடு, ஜெயசேன என்ற சிங்களவனும் வேலை செய்தான். ஜெயசேனா பலகாலம் செல்லமுத்துவோடு வேலை செய்த படியால் ஏற்றகனவே மாரிமுத்துவை அவனுகுத் தெரியும். ஆரம்பத்தில்

மாரிமுத்துவுக்கு தகப்பனுக்கு உதவியாளனாக ஏற்கனவே பல தடவை வேலை செய்ததால் தனைச்சுற்றி உள்ள ஐஸ் பெட்டி ஒவோன்றுக்குள் ஆணும் பெண்ணுமாக பிரேதங்கள் இருந்தது அவனுக்கு பயத்தை கொடுக்கவில்லை. எதோ ஆபீசில் பலரோடு வேலை செய்வத போன்ற சூலலே அவனுக்கு ஏற்பட்டது. அதனால் ஒவொரு ஐஸ் பெட்டியைத் திறந்து கையில் உள்ள பிரேதங்கள் பற்றிய பதிவுகளோடு செக் பண்ணிகொண்டிருந்தான்.

அன்று ஒரு வாகன விபத்தில் இறந்த ஒரு இளம் வாலிபனின் உடல் பிரேத பரிசோதனைக்கு வர இருப்பதாக பிரேத பரிசோதனைக்கு தேவையான உபகரணகளை தயார் படுத்திக் கொண்டே ஜெயசேன சொன்னான்.

“வாலிபன் இறந்து அதிக நேரமா ஜெயா”? மாரிமுத்து கேட்டான்.

“ நேற்று இரவு விபத்து நடந்திருக்கிறது. தனது காரில்’ குடித்து’ போட்டு ஓடி இருக்கிறான். எதிரே வந்த லோரி யோடு மோதி விபத்து நடந்திருகிறது என்று போலீஸ் ரிபோர்ட் சொல்லுகிறது”

“ஒருநாளைக்கு இப்படி கொலை, தற்கொலை, விபத்து என்று இரண்டோ மூன்றோ சாவுகள் நடக்கிறது. சிதைந்த நிலையில் அடையாலம் காணமுடியாத நிலையில் உடல் மொசாரிக்கு வருகுது.“

‘”மாரி உடலை பாதுகாத்து திருப்பி சொந்தக்காரருக்கு கொடுக்கும் நல்ல நிலையில் கொடுத்தால் அவர்கள் சந்தோசத்தைப் பார்க்கவேண்டுமே. சிலர் வசதி படைத்தவர்கள். அவர்கள் நேரடியாக வந்து உடலைப் பாரம் எடுக்காமல் பியூனரல் பார்லரிடம் உடலை பொறுப்பு கொடுத்துவிடுவார்கள். பாவம் வசதி இல்லாதோர் ஒரு வாடகை வானில் உடலை கொண்டு போய் விடுகிறார்கள். பல காலம் ஐஸ் பேட்டியில் எவரும் பொறுப்பு ஏற்காமல் இருக்கும் அனாதைப் பிரேதங்களை அரசு தகனம் செய்துவிடுகிறது” தன்; அனுபவத்தை ஜெயசேன சொன்னான்.

அம்புலன்சில் இறந்த வாலிபனின் உடலை போலீஸ் கொடு வந்தது. உடல் முழுவதும் வெள்ளை துணையால் முடி இருந்தது. உடலை போஸ்மோர்டேம் செய்யும் மேசையில் உடலை கொண்டுவந்தவர்கள் கிடத்தினார்கள். மாரிமுத்து; துணியை நீக்கி முகத்தை பார்த்தான். அடையலாம் காணமுடியாத வாறு முகம் சிதைந்து இருந்தது. உடைகின் கையில் இருந்த விலை உயர்ந்த ரொலெக்ஸ வாட்சைக் கொண்டு உடனே மாரிமுத்து அடையளம் கண்டான்.

“ ஜெயா இந்த உடலின் சொந்தகாரனை எனக்கு படிக்கும் காலம் முதல் கொண்டு தெரியும். இவனை மாணவர்கள் “பொஸ்” என்று நக்கலாக கூப்பிடுவர்கள். இவன் தகப்பன் துபாயில் எண்ணைக் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவனுக்கு கொழும்பில் விலை உயர்ந்த பகுதியான கொழும்பு 7 வட்டாரத்தில் பெரிய வீடு. வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள். படிப்பில் இவனுக்கு அக்கரை இல்லை. அப்பவே ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்த மாணவன் இவன் ஒருவன் மட்டுமே. இவன் கையில் எபோதும் விலை உயர்ந்த ரொலெக்ஸ வாட்ச் கட்டியிருப்பான். படிக்கும் போதே சரியாக குடிப்பான். எபோதும் சிகரெட்டும் கையும் தான். போதை மருந்து கூட எடுப்பான் என்று என் நண்பர்கள் சொன்னது நினைவிருக்கிறது. வசதி உள்ளவன் என்றபடியால் பல மாணவிகள் இவனோடு சிநேகிதம். அந்தஸ்து குறைந்த மாணவர்களோடு பேச மாட்டான்.” மாரி வந்த உடலின்’ சொந்தக காரனைப் பற்றிய விபரம் சொன்னான்.

“இப்படி வசதியாக வாழ்ந்தவனுக்கு இந்த குறைந்த வயசில் இப்படியும் ஒரு சாவா. ஏன் இவனின் தாய் இவனைக் கவனிபதில்லையா?”

“ இவனின் தாய் இறந்து விட்டாள். ஆயா ஒருத்தி தான் இவனைக் கவனித்தது”

“முன்பு இரு தடவை குடித்து போட்டு வேகமாக கார் ஒட்டி எங்களிடம் இவன் மாட்டுப்பட்டு, காசு கொடுத்து தப்பிவிட்டான். இப்ப இவனே தன் சாவைத் தேடிக்கொண்டான்” உடலை கொண்டு வந்த போலீஸ்காரன் சொன்னான்.

“ இவனுக்கு என்ன பெயர் மாரி?. ஜெயசேன’ கேட்டான்.

“ பொஸ் என்ற்று மாணவர்கள் கூப்பிடும் இவன் பெயர் மார்க்கண்டு. ஸ்டைலாக மார்க் என்று சொல்லிக்கொள்வான்”

“ இது கொலையா அலது தற்கொலையா என்று பரிசோதனைக்குப் பின் டாக்டர் தான் சொல்லவேண்டும். இவன் உயிர் இருபது இலட்சத்துக்கு இன்சுரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான இந்த’ பரிசோதனை இன்சுரன்ஸ் கொம்பனிக்கு அவசியமாகிறது” போலீஸ்காரன் சொன்னான்.

அரைமணியில் வந்த டாக்டர் இரு கைகளிலும்; கையுறைகளை மாட்டிக்கொண்டு பிரேத பரிசோதனையை ஆரம்பித்தார். மாரிமுத்தும், ஜெயசெனவும் இரு கைகளிலும்; கையுறைகளை மாட்டிக்கொண்டனர். உடலை வெட்டி பரிசோதிக்க கூர்மையன கருவிகளை டாக்டர் கேட்ட போது எடுத்துக் கொடுத்தார்கள். உடலின் குடலில் இருந்த வந்த துர் நாற்றம் மாரிக்கு குமட்டலைக் கொண்டுவந்தது. இது அவனுக்கு முதல் அனுபவம்

இரு நாட்களுக்குப் பின் வந்த உடல் அழகிய இளம் பெண் ஒருத்தியினது. போலீஸ் அறிக்கையின் படி’ மூன்று பேரால் கற்பழிக்க பட்டு கொலை சையப்டு இருக்கிறாள். அவளைக் கண்டதும் மாரிக்கு சித்திராவின் நினைவு தன வந்தது.

“ ஜெயா இவள் என்ன கல்லூரி மாணவியா?”

“ இல்லை இவள் ஒரு மாடல். ஆனால் தன அழகை வைத்து விபச்சாரம் செய்து சம்பதிதவள். எனக்கு இவளைத் தெரியும்”

“ தெரியுமா. எப்படி”

“ இவளைப் பற்றி சிங்கள பத்திரிகைகளில் பக்கம் பக்கம்மாக எழுதியிருகிறார்க்கள். இவவளுக்குப் பல அரசியல் வாதிகளின் தொடர்புண்டு. இவள் உண்மை பெயர் சோமாவதி. தெற்கே ரம்புகனை கிராமத்தைச் சேர்ந்தவள். கொழும்புக்கு வந்து தன பெயரை மாலினி என்று மாற்றிக் கொண்டு பியூடி பாலர் ஒன்றில் வேலை செய்தவள்.”

“ இவ்வளவு விபரமும் உனக்கு எப்படி தெரியும் ஜெயா”

“ நானும் ரம்புக்கன கிராமத்தைச் சேர்த்தவன். இவள் ரோடியோ சாதியைச் செர்ந்தவள். இந்த சாதி பெண்கள் அழகானவர்கள். தீண்டப் படாத சாதி. ஒரு காலத்தில் இந்த சாதிப் பெண்கள் மேலாடை அணிவதில்லை. இப்போ அப்படி இல்லை.”

மாரிமுத்து’ வேலை செய்ய ஆரம்பித்து இரு மாதத்துக்குள் பலவித காரணங்கள் நிமித்தம் ஆணும் பெண்ணுமாக பல உடல்கள் மோச்சரிக்கு வந்தான். அவைற்றில் அவனின் மனதை பாதித்தது சாயா என்ற ஆறுவயது’ அழகிய சிறுமியினது. இது கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட கேஸ். சிறுமியை மிருகத்தனமாக கற்பழித்திருக்கிறான் கொலை செய்தவன், சிறுமியின் முகமெல்லாம் நகத்தின் கீறுகள். கழுத்து முறிந்து இருந்தது.

“ இப்படியும் மனிதர்கள் மிருகங்களைப் போல் வாழ்கிறர்களா ஜெயா”,மாரி கேட்டான்.

“ இது ஒரு பிரபல கொலை கேஸ். போலீஸ்சுக்கு ஒருமாதம் எடுத்தது. முதலில் கொலையாளியாக பிடி பட்டவன் டிஎன்ஏ பரிசோதனைக்குபின் விடிபட்டு, அதன் பின் அவனின் அண்ணன் பிடிபட்டான். அவன் ஒரு போதை மருந்து அருந்துபவன். டிஎன்ஏ பரிசோதனைக்குப் பின் அவன் தான கொலைகாரன் என்று நிருபிக்கப்பட்டது. பேப்பரில் தினமும் இந்த கேஸ் பற்றி விபரம் வந்தது” என்றான் ஜெயா

“ இனொரு உடல் ஆஸ்பத்ரியில் பல களம் இருந்த இறந்தவன்.
“ இந்த உடலின் ரிபோர்டில் என எழுதி இருக்கிறது. எழும்பும் தோலுமாக இருகிறதே உடல்” மாரிமுத்து ஜெயசேனவை கேட்டான்.
“ மாரி, நான் இவனுக்கு இருந்த வியாதியை சொன்னால் நீ பயப்பட மாட்டியே”
“ சொல்லு ஜெயா”
“ இவனுக்கு இருந்தது எயிட்ஸ் நோய். இவன கப்பலில் வேலை செய்தவன். பாங்கோக். மூம்பாய் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு போய் பெண்களோடு தன இச்சையை தீர்த்து தேடிக்கொண்டதே இந்த நோய். இதுக்கு வைத்தியம் இல்லை.”
“ இவனுக்கு குடும்ப இல்லையா ஜெயா”?
“ நாள் காலம் இவனுக்கு திருமணம் ஆகவில்லை. ஓன்று மட்டும் சொல்லுரான் இவனது udali தொடும் போது கையுரைறை போட மறக்காதே. யார் கண்டது கிருமிகள் இறந்த பிறகும் இருக்கலாம் அல்லவா” ஜெயா மாரியை எச்சரித்தான்.

ஒரு நாள் பிரபல பத்திரிகையின் ஆசிரியரும் , அரசியல் ஊடகவியாலாளின் உடல் துப்பாக்கிச் சூடுகளோடு மொச்சரிக்கு வந்தபோது “உண்மையை மக்களுக்குச் எடுத்துச் சொன்னதுக்கு இதுதானா கிடைத்த பரிசு ஜெயா” தன்னை அறியாமல் மாரி கேட்டான்.

“ இதெல்லாம் பெரிய இடத்து அரசியல். இதுபோல அந்த அந்த ஐஸ் பெட்டிக்குள் இருக்கும் ரக்கேர் விளையாட்டுகாரன் முகம்மதுவின் உடல், யார் கொலைகாரன் என்று கண்டு பிடிக்கவில்லை . நீ பேசாமல் உன் வேலை கவனி. போலீஸ்கரனோடு ஒன்றும் பேசாதே. “ ஜெயா மாரிக்குஅறிவுரை சொன்னான்


*******

மூன்று வருட காலத்தில் மாரிமுத்து பல வேலைகளுக்கு விண்ணப்பித்த போது மூன்று மொழிகளும் அவனுக்குத் தெரிந்த படியால் போலீஸ் செவையில் இருந்து நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வந்தது. நேர்முகப் பரீட்சையில் சித்திபெற்று சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு நியமனம் கிடைக்கும் என மாரிமுத்து எதிர்பார்கவில்லை. பாவம் மாரிமுத்து அந்த நல்ல செய்தியை தந்தைக்கு சொல்வதுக்கு, செல்லமுத்து உயியரோடு இருக்கவில்லை.
தன் பழைய காதலி சித்திரா விரும்பிய பதவியையும் விட சில படி உயர்வாக தனக்கு கிடைத்ததை சித்ராவுக்கு சொல்ல வேண்டும் போல் மாரிக்கு இருந்தது. ஆனனல் அவள் இருக்கும் இடம் தெரியாது என்று சந்திரனுக்கு மாரி சொன்னான்.

“மாரி அவளோடு தொடர்பு கொள்வதை பற்றி இனி நீ யோசிக்காதே. அதை நீ நிறுத்திக் கொள்” சந்திரன் சொன்னான்.

“ ஏன் சந்திரன். ஏன் அப்படி சொல்லுறாய்’?

“ மாரிமுத்து, கெதியிலை உன் பழைய காதலி சித்தி இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறாள்” சந்திரன் சொன்னான்.

“ என்ன சித்திரா இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறாளா”? மாரிமுத்து எதிர்பாராதவாறு கேட்டான்.

“ இதோ பார் மாரி. எனக்கு வந்திருந்த திருமண அழைப்பிதலை” என்று தனக்கு வந்த திருமண அழைப்பிதலை மாரியிடம் நீட்டினான் சந்திரன்

மாரிமுத்து அழைப்பிதலை வாங்கி வாசித்த போது அதில்
மணமகன்: செல்வன் சிவநாதன் சுந்தரம் ( கணித விரிவுரையாளர்) – கிழக்கு’ மாகாண பல்கலைகழகம்,
மணமகள்; செல்வி சிவலிங்கம் சித்திரா (பௌதிக விரிவுரையாளர்) – கிழக்கு’ மாகாண பல்கலைகழகம்,
என்று எழுதப்ட்டிருந்தது. அதை வாசித்ததும் தன்னை அறியாமலே மெளனமாக ஒரு பெரு மூச்சு விட்டான். அதை தொடர்ந்து “நல்ல சோடிப் பொருத்தம்” என்றான் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து.


*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் – கனடா) (3-Jun-17, 5:32 am)
பார்வை : 209

மேலே