பிறந்தது கடவுள் சிலை
![](https://eluthu.com/images/loading.gif)
முத்தம் இட்ட உளியை
தலையில் தட்டி சுத்தி
விலக்க
நின்றதோ முத்தமிடுதலும்
விலகலும்?
முத்தமிடுதல் சத்தமின்றி
தொடர
தலையில் தட்டுவது
இசையாய் ஒலிர
சத்தமின்றி இட்ட முத்தத்தில்
சந்தம் தப்பாத சத்ததில்
மௌனமாக பிறந்தது
பலர் வணங்க தயாராய்
அழகிய கடவுள் சிலை..,
#Sekar_N