அன்பு செலுத்துவதும்

புறக்கணிப்பதும் !
தட்டிக்கழிப்பதும் !
உதாசீனப்படுத்துவதும் !
உதறித்தள்ளுவதும் !
நிராகரிப்பதும் !
வார்த்தை அம்புகளால் காயப்படுத்துவதும் !

எதார்த்தமாய் என் இதயம் உடைத்து போவது
உனக்கு எளிதாகி போய்விட்டது !


அக்கறை கொள்வதும்
அன்பு செலுத்துவதும்
அரவணைப்பதும்
விட்டுக்கொடுத்தலும்
விட்டு விலகாமலும்

எதார்த்தமாய் உன் இதயம் காத்து
இனிதாய் உன்னுடனே இருப்பது எனக்கு
எளிதாகி போய் விட்டது !

எழுதியவர் : ஜீனத் ரோஜா (3-Sep-17, 1:21 pm)
பார்வை : 359

மேலே