சூரிய காந்தியாய்
சூரிய காந்தியாய்
காணாததை எல்லாம்
காண வைத்தாள்
என் காதலி.
பட்டின் மென்மையான
வண்ணத்து பூச்சிகளை
விரல்களில் மறைத்து
பாயசச் சொற்களில்
புன்னகை உடனான
தாரகைகள் மின்னிட
இரவுகளும் பளீரிடும்
மின்னல் கீற்றென
பரவிடும் விரல்களிடையே.
என் காதல் என்னை
சொல் ஆராய்ச்சியில்
ஆழ்த்தியதில் தலையில்
ஆபரணம் அணிந்து
மின்னிடும் நாகங்கள்
வாழும் உலகுக்கு
என்னை உந்திட
இசையே உலகான
உலகுக்குள் புகுந்து
விரிந்த விழிகளுடன்
எந்த உலகம்
மணிக்கணக்கில்
விடியலைப் பற்றி
சிந்தித்து இருக்குமோ
அங்கே என் காதல்
மெளனத்தில் சூரியத்
துகள்களை மறந்திட்ட
கோட்டி பிடித்த
சூரிய காந்தியாய்
காணாததை எல்லாம்
காண வைக்கிறது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
