கவிதைக்காடு -- தரவு கொச்சகக் கலிப்பா
கவிதைக்காடு -- தரவு கொச்சகக் கலிப்பா
கவிதைகளின் காட்டினிலே கவிஞர்கள் சங்கமமே !
செவிதனிலே நெஞ்சம்வழி செப்பேடும் சென்றிடுமே .
புவிதனிலே சான்றோர்கள் புத்தாக்கம் செயவேண்டிக்
கவிதைகளை வனைந்துள்ளார் கற்போமே யாவருமே !
நூல்களுமே ஆயிரமாம் நுணுக்கமான கருத்துகளாம் .
ஆல்விழுதைப் போன்றதொரு அற்புதத்தின் களஞ்சியமே !
பால்மதிக்கும் இடமுண்டு பாரினையும் ஆண்டிடவே !
மேல்கீழோர் வேறுபாடும் மேதினியில் இல்லையினி !
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்