சிலை பெயர் பதவி

அண்ணாப் பெரியாரைக் கண்ணாக ஏத்திடப்
பின்கலைஞர் அண்ணாவைப் போற்றினார் --- அண்ணாவைத்
தம்பிமறந் தாரென்றக் குற்றமுடன் தம்கொடியில்
எம்ஜியார்அண் ணாவைவைத்தா ரு

எம்ஜிஆர்க் குப்பின்னே அம்மை வரவுந்தான்
எம்ஜிஆர் போதை அதிகமாகி --- எம்ஜிஆர்
தெய்வக் கணமென உய்த்தார் சிலைபல
தொய்விலா வைத்தாரேப் பார்

சுதந்திரம் ஏத்துமென மக்கள் பதைத்தார்
சிதறி உருண்டது ஆண்டு --- பதறாதே
பத்திரண் டாண்டில் பறித்தாரேக் கொத்தாக
எத்தரும் ஆட்சிபிடித் தார்

ஐம்பதாண்டு கட்சிகள் ஆளவர் ஜாம்பவானாம்
ஜம்பமதைக் கண்டார் தமிழ்மக்கள் --- வம்பாக
மக்கள் அறியாமல் கள்போதை யில்விழச்
சொக்கமனம் பாழாக்கி னர்

ஆனந்த களிப்பு
கோடியில் உறுப்பினர் கண்டார் - தெருக்கோடி
போனமக் களையிவர் திரும்பிக் கண்டாரா
ஜாடிக்கேற் றமூடித் தெரிவுசெய் - அறிவு
கெட்டுத்தகு தியிழந்தார் தலைவரை தெரிவுசெய்ய

தெருவுக்குத் தெருவுக்குக் கண்டாரே - பெயரில்
பெரியார் அண்ணா எம்ஜியார் கண்டாரே
ஊரூருக் கும்மக்கள் கண்டாரே - நகரிலே
பெரியார் அண்ணா எம்ஜியா ரைக்கண்டார்
ஊர்பட்டி தொட்டியெல் லாம்சிலைகள் - மக்களை
ஏமாற்றிப் போட்டார்பஞ் சமாபாத கக்கலைகள்
தெருத்தெ ருவாய்மக்கள் போராட்டம் - இதனால்
பயணிப்போர் பலருமடை வர்உயிர் போராட்டம்

ஊர்தியை யும்விட்டா வைத்தார் - அண்ணாவுடன்
பெரியார் கேட்டறியாப் பெயரையும் வைத்தார்
ஊர்அறிந்த மேதைபுகழ் மறைத்தாயே - வஞ்சகமாய்
ஊரறியா உன்னைச்சார்ந் தோர்பேரை வைத்தாயே
ஊர்மெச்சும் என்றுதவாக் கரைபேரும் - வைத்தாய்
மாளிகை வளாகம் பாலம்பூங்கா வரைக்கும்
ஊரில்என்ன நம்நாட்டில் பஞ்சமா - மேதைகள்
தியாகிகள், அறிவுசால் புலவர்க்கும் பஞ்சமா

லட்சுமண சாமிமுதலி வேந்தராம் - மேதையிலா
சுந்தரவ டிவேலர் அவ்விடம்பு குந்தாராம்
பட்சமிது தகுதியற்ற திறமையேத் - தகுதி
பார்க்காப் பதவிபட்டம் கொடுத்தாய் திறமையாய்
வெட்கமாய் இருக்கிறது பட்டியலைப் - போட
எல்லாமே சேர்க்க வேண்டியதுன் பட்டியலில்

--- ராஜ பழம் நீ (20-sep-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (20-Sep-17, 10:50 am)
பார்வை : 284

மேலே