இந்தியா
வெண்மை பனி மூடிய
மென்மையான மேலழுகும்
பாதத்தில் படர்கின்ற
பால் கடலழகும்
பக்க அழகில்
சங்கமிக்கும் சமவெளியும்
தான் சாய்ந்து
பிறரை சாய்க்கும் மலையழகும்
கோடையில் துளிர்விட வைக்கும்
மழையழகும்
தெற்கில் தெம்மாங்கு பாடும்
தென்றலில் அழகும்
வடக்கில் வளம் வரும்
வாடையின் அழகும்
பொருமை காக்கும்
பொம்மலின் அழகும்
கூப்பிட்டு அழைக்கும்
குடகின் அழகும்
நாணமாக நடனமாடும்
நதியின் அழகும்
இந்தியாவை தவிர
இயறைகையாக
வேறு எங்காவது இன்றியமையுமோ..!