குட் மோர்னிங் குறுஞ்செய்தி

குட் மோர்னிங் என்ற
உன் இரு வார்த்தையை
சுமந்து கொண்டு வரும்
உன் குறுஞ்செய்தியைக
காணும் வரை என்
காலை பொழுதுகள்
முழுதாய் விடியாமலே

நீ எனக்கு அனுப்புவது
எல்லோருக்கும் அனுப்பும்
ஒரு பார்வர்டாக
இருந்தால் கூட
அது எனக்கும் மட்டுமெனச்
சொல்லி மொத்தமாய்
உறிஞ்சிக்கொள்கிறது
அந்த வார்த்தைகளை
அத்துணை நேசத்தோடு
என் இதயம்

உன் உன் குரல்
சுமந்தே வருகிறது
அந்த எழுத்துக்கள்
அவற்றின் செல்ல
கிசுகிசுக் குரலில்
கலைகிறது என்
தூக்கம்

மெல்ல திறக்கும்
என் விழிகள் ...
விடாமல் பார்த்துக்
கொண்டிருக்கிறது
அலைபேசி திரையில்
தெரியும் உன் பெயரை ...
அந்த கணத்தில்
அந்த மவுனத்தில்
உன்னோடு ஓராயிரம்
காதல் கதைகளைப
பேசித் தீர்த்து
எழுகிறேன் நான்


அலைபேசி திரையில்
தெரியும் உன் பெயரை
விடாமல் பார்த்துக்
கொண்டே மெல்ல
எழுதத் தொடங்குகிறது
என் விரல்கள் ...
குட்டியாய் ஒரு
குட் மோர்னிங்
அந்த கணத்தில்
அந்த மவுனத்தில்
அந்த எழுத்துக்களில்
உன்னிடம் ஓராயிரம்
நேச முத்தங்களை
சுமந்து வருகிறது
என் குறுஞ்செய்தி

உன்னிடம் சொல்ல
இன்னும் எத்தனையோ
பெருஞ்செய்திகள்
எனக்குள் இருந்து
முண்டியடித்துக் கொண்டுவர
ஏனோ குறுஞ்செய்தியோடு
முடித்துவிட்டு இன்னும்
குறுகுறுத்துக் கொண்டிருக்கிறது
பாவமாய் என் விரல்கள்


அலைபேசி திரையில்
தெரியும் உன் பெயரை
விடாமல் பார்த்துக்
கொண்டிருக்கிறது
என் ஆசை விழிகள் ...

எழுதியவர் : யாழினி வளன் (13-Oct-17, 9:23 pm)
பார்வை : 699

மேலே