என் ஏகாந்த இரவுகள்

வானில் நிலா வட்டமிட
வசந்த கால இளங் காற்றும்
சுள்ளென்று மேனி தொட
சாளர இடுக்கில் ஊடுருவிய மெல்லொளி
என் படுக்கையின் இருள் விலக்க
என் காதில் ரீங்காரமிடுகின்றன
அவள் மொழிகள் தேனின் சுவையாக
அந்த வண்ண நிலா முகமாக
என் உடலைத் தைக்கிறாள்
அசையும் ரதமாக முன்னே வந்து நிற்கிறாள்
நினைவுகள் சூழ என் நொடிகள் நீள
தனிமை அரக்கனின் கொடும் பிடியில்
கழிகின்றன என் ஏகாந்த இரவுகள்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (19-Oct-17, 12:35 pm)
பார்வை : 246

மேலே