உன் இதழ்கள் தான் என்னை பேசவிடாமல்

ஏதோ ஏதோ பேசவேண்டும் !
என்ன என்னவோ பேசவேண்டும் !
இனிதாய் பேசவேண்டும் !
தயக்கம் இன்றி பேசவேண்டும் !
தடையின்றி பேசவேண்டும் !

என்பதில் அத்தனை ஆசைதான்
இதயத்தில் !

ஆயினும் உன்" இதழ்கள் " தான்
என்னை பேசவிடாமல் இம்சை செய்கிறது
இப்படி !

உன் "இதழ்" கள் " வேண்டும் எனக்கு
"தேவாமிர்த சுவை " இப்படித்தான் இருக்கும்
என்பதை தெரிந்து கொள்ளவாவது !

எழுதியவர் : முபா (20-Oct-17, 7:43 pm)
பார்வை : 1646

மேலே