கிராமத்துப் பள்ளிக்கூடம்

பிரேம் ஆனந்த் சுரேந்திரன்...
தனிநபராக இருந்திடினும்
குழுவாக இருந்திடினும்
தனித்தன்மை காப்பவன்...

கல்வியைத் தன்னுள்
கண்ணும் கருத்தாய்
வளர்த்தவன்.. வளர்ப்பவன்..
அவனை அவனே பார்ப்பவன்
அக்கம்பக்கமும் பார்ப்பவன்...

பொறியியற் கல்வியில்
உச்சம் தொட்டவன்
சட்டக்கல்வியையும்
மிச்சம் வைக்காதவன்...
எல்லாவற்றிலும் உயரம்
தொட தன்னம்பிக்கையை
தன்னுள் வைத்தவன்...

ஆணுக்குநிகர் பெண்...
அற்புதமாகச் சொன்னான்
நம் செல்லக் கவிஞன்
யாரும் வெல்லாக் கவிஞன்
அவன் முண்டாசுக் கவிஞன்
சுப்பிரமணிய பாரதி...

அக்கவிஞன் சொன்னதை
தன் மகள்களை
அற்புதமாக வளர்த்த
பாங்கால் மெய்ப்பித்தவன்...
பிரேம் ஆனந்த் சுரேந்திரன்...

கலைகளை ரசிப்பதிலும்
கருத்துக்களைப் பகிர்வதிலும்
திறமைகள் மேம்படுத்தலிலும்
திறன் மிக்கவன் என்பதை
இவன் கமலஹாசனின்
பண்பட்ட ரசிகன் எனும்
அடையாளமும் அளவிடும்...

கமலஹாசனின்
உயர்ந்த உள்ளம் சினிமா
இவனுக்குப் பிடிக்கும்
எனக்கும் பிடிக்கும்...
அதனால்தான் இந்த
சினிமாவுக்கு எங்கள்
பொறியியல் வகுப்புகளின்
இரண்டு பாடவேளைகள்
பார்வதி தியேட்டரில்
தாரை வார்க்கப்பட்டன...
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்தைந்தில்...

நட்பு பாராட்டுவதில் இவன்
என்றும் பாராட்டப்படுபவன்..
பிரேமின் உயர்ந்த உள்ளம்
அவனது உயரத்தைவிடவும்
உயர்வானது...

கற்றார்க்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு...
கற்ற கல்வியில் தீர்க்கம்
அரசுப்பணியை இவனுக்கு
வாங்கித் தந்தது...
பணிக்குச் சென்றபின்னும்
படித்துக்கொண்டே இருப்பது
அண்ணா பல்கலையில்
இவனுக்கு முனைவர் பட்டம்
வாங்கித் தரப் போகிறது..

கிராமத்துப் பள்ளியில்
அன்று இவன் மாணவன்...
சென்னை மாநகர
வளர்ச்சித் துறைக்கு
இன்று இவன்
உயர்நிலைப் பொறியாளன்..
இதனால் இவன்
கல்வி.. விடா முயற்சி..
கடும் உழைப்பின்
சிறப்பை அழகாய்ச்
சொன்ன நெறியாளன்...

பொருநை இல்லத்தில்
இவன் தங்கியிருந்த அறை
மிகவும் பக்கத்தில்..
கல்லூரி வகுப்பறையில்
இருப்பான் பக்கத்தில்...
இன்று தொலைவிலும்
மனதால் இருக்கிறான் பக்கத்தில்...

பிரியமான பிரேம் ஆனந்துக்கும்
அவர்தம் இல்லத்தரசிக்கும்
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..
எல்லா வளங்களும் பெற்று
வாழ்க பல்லாண்டு!

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍🙋🏻‍♂🙏😀🎂🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Oct-17, 2:45 pm)
பார்வை : 421

மேலே