மனதின் ஓசை
மனதின் ஓசை
கேட்கும் திசையே
காற்றில் தென்றல் வீசும்...
உயிரின் மொழியை
இதழில் தெளிப்பாய்
உயிரும் உயிரும் உருகும்...
கண்களின் மொழியில்
காட்சிகள் ஒன்றாய்
காணும் பொழுது தெரியும்...
மொட்டுகள் ஒன்றாய்
அவிழும் பொழுது
பூக்களின் மொழிகள் என்னவாகும்...
மாவிலை தோரணம்
அசையும் நேரம்
இதயம் என்ன இசை பாடும்
தென்றல் தீண்டவே
திங்கள் காயவே
முத்துக்கள் சிதறவே
தேகம் காணாமல் போகும்...
~ பிரபாவதி வீரமுத்து