அம்மா என் தெய்வம்
பத்து மாதங்கள்
எனை சுகமாய்
தாங்கினாள்
ஆயிரம்
வலிகளை தாங்கி
எனை இவ்வுலகிற்கு
அறிமுக படுத்தினாள்
என் முதல் அழுகுரல் கேட்டு
இன்ப பெருமூச்சுவிட்டாள்
என் குறைகளை
நிறைகளாக மாற்றினாள்
அவள் விழியில் வைத்து
எனை காப்பாற்றினாள்
அவள் மனதில் வைத்து
எனை போற்றினாள்
நான் வளர அவள் தேய்ந்தாள்
என் கனவுகளை நிஜங்களாக்கினாள்
தனக்கென்று வாழாமல்
எனக்காகவே வாழ்ந்தாள்
அம்மா என் தெய்வம்...