நெகிழும் நினைவுகள்
மழலைப் பருவத்தில் யுகமாய் பயணித்த நொடிகள்,
இன்று,
நகர்பனியின் ஊடுறுவலாய்,
பிரதிபலிக்கிறது..!
வயதை விட காலம் அதிவிரைவில் கரைகிறது..!
ஒரு பாகம் அலைபேசியின்அபூர்வங்கள்..!
மறு பாகம்
அலுவலக ஆடம்பரங்கள்..!
சற்றே திரும்பிப் பார்த்தேன்..,
என் குறும்வயது நினைவலைகளை..!
தேடித்தேடித் தின்ற தேன்மிட்டாய்..!
பேருந்தை விட்டு விட்டு விளையாடி வீடு வந்த என் நட்பு வட்டங்கள்..!
குட்டி போடாத எல்லா புத்தகத்திலும் ஒளிந்திருந்து கண்சிமிட்டிய மயிலிறகுகள்..!
டோராவின் படமுடன் சிதறிக்கிடக்கும் நோட்டுகள்..!
பள்ளிமைதான புள்வெளிகள் அரட்டை அரங்கமாய் உருமாற,
அன்றாடம் கதை கேட்கும் சுற்றி நின்ற மரங்கள்..!
விடுமுறை முடிந்ததை எண்ணி வருந்திய ஞாயிறுகளும்,
நண்பர்களை கண்ட புன்னகையில் புலரும் திங்களும்
என கடந்தது என் பள்ளி நாட்காட்டியின் தாள்கள்.
..!
இப்போது நினைத்தாலும் நிஐமாகும் நெகிழ்வுகள்...!