கறுப்பு ரோசாப்பூ
அவளென்ன கருங்கல்லில்
அழகெல்லாம் உருவேற்றி
தேவ கன்னிகை சிலைபோல்
சிற்பி செதுக்கிய சிலையா ?
இப்படி என் முன்னே உயிர்கொண்டு
என்னை தன் சுட்டும் சுடர்விழிகொண்டு
நோக்குகின்றாளே ! , கருப்பில் ஓர்
பிரமிக்கும் பேரழகாய் !
ரோசாப்பூ அழகானப்பூ, அதிலும்
காதலர்கள் மனதிற்கு எப்போதும்
இன்பக் கிளர்ச்சி தரும் எழில்பூ,
அதிலும் அரிய கருப்புறோசாப்பூ
பட்டு ரோசாவென்றே அழைப்பர் அதை ,
அதில் பூரிக்கும் அழகு அத்தனை
இவளும் , கறுப்பழகி கறுப்பு ரோசாப்பூ!
இவள் என்ன எகிப்து ராணி கிளீயோபாற்றா
உயிர்பெற்று எழுந்துவந்தாளோ!,இல்லை
விண்ணிலிருந்து மண்ணிலிறங்கிவந்த
கறுப்பு மேனகையோ, இல்லை கருமேகத்திற்கு
அழகின் மொத்த உருவாய் வடிவிகொடுத்து
இந்திரன் மண்ணிற்கு அனுப்பிவைத்தானோ !
கருப்பும், வெண்மையும் இறைவனே கொண்டாடும்
இரு தனி நிறங்களோ என்று வியந்தேன்,
ஆம் அந்த வண்ண வானவில்லில் கூட
கருப்பும் வெண்மையும் காணவில்லையே
எந்தன் விந்தைமிகு கறுப்பழகியே
உன் அழகிற்கு நான் தலை வணங்குகிறேன் !