நண்பன்-நட்பு
நண்பன் சந்தன மரம்
மரமாய் இருந்தாலும் மணக்கும்
மரம், நண்பன்நல்ல குணம்போல,
அரைத்தால் சந்தனக்குழம்பு மணக்கும்
நண்பன் நண்பனுக்கு நட்பால் தரும்
நலங்கள்போல், எரித்தாலும் மணக்கும்
மரம், நண்பனின் நட்பின் தியாகம்போல்.