பொம்மை
வாங்கிவந்த பொம்மைக்கு தனது உடையை உடுத்தி அழுகுபார்த்தாள் பொம்மு... சிறிது நேரம் கழித்து பொம்மையை அணைத்தவாரே தூங்கிப்போனாள். கனவில் பொம்மைக்கும் அவளுக்கும் சண்டை மூண்டது. வந்த கோவத்தில் வேகமாக இரண்டு அரை விட்டுவிட்டாள். தூங்கி எழுந்ததும் அவள் பொம்மைக்கு கொடுத்த நான்கு முத்தத்திற்கு யாரும் கணக்கு கேட்க வேண்டாம்.. அன்றிரவு கனவில் நான்கு அரைகள் வாங்கும் ஆசையுடன் தூங்கிப் போனது அவளுடனே அந்த பொம்மை.