இதயம் மீட்டும் இரண்டாயிரத்து பதினெட்டு
இதயங்களை மீட்டட்டும்
இரண்டாயிரத்து பதினெட்டு
----------------------------------------
நடந்த நல்லவைகள்
நினைவுப் பூங்காவில்
நின்றிருக்க வேண்டாதவைகள்
கனவோடு கனவாய்க்
காணாமல் போகட்டும்...
மின்சாரக் கண்டுபிடிப்பு
மின்காந்த அலைப்பயன்பாடு
கணினிகள் கண்டுபிடித்த
பிரமிப்பூட்டும் தொழில்நுட்பம்
மனிதனுக்குரியது...
நீள அகல உயரம்
தெரியா பிரபஞ்சம்
சூரியக்குடும்பம் சுற்றும் பூமி
புவியின் ஈர்ப்பு விசை
ஆயிரங்களில் உயிரினங்கள்
ஆறறிவு மனித இனம்
அனைத்தையும் இயக்கும் சக்தி
இவையெல்லாம் படைத்த
இறைவனின் அற்புதங்கள்
எண்ண எண்ண
பிரமிக்கத் தகுந்தது...
காற்றும் நீரும்
வானும் நெருப்பும்
உயிர்கள் வாழ்ந்திட
பிரதிபலன் பாராமல்
ஜீவித்திருக்கிறது
அன்றிலிருந்து இன்றுவரை...
மாந்தர்கள் நாமும்
நலமாய் வாழ்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்
நந்தவனத்துத் தென்றலாய்..
ஒருவருக்கொருவர் இசைவாய்...
நிலவுலகில் வாழும் வரை...
நித்தம் சொல்லும் வாழ்த்துக்களில்
இருக்கிறது ரத்த ஓட்டம்..
புத்தாண்டு வாழ்த்துக்களில்
இருக்கிறது உயிரோட்டம்...
புத்தாண்டுகள் பல வரும்...
இதயங்களை மீட்டும்
இரண்டாயிரத்து பதினெட்டு
ஒருமுறைதானே வரும்...
அதன் தனித்துவத்தில்
தலைமுறைகள் உயரட்டும்...
நடப்பவை நல்லனவாக
இருக்கட்டும்...
நடப்பவை எல்லாம் நம்
கட்டுக்குள் இருக்கட்டும்...
முதன்மையானவற்றை
முதலாய்ச் செய்து...
முடிவினை மனதில் வைத்த ஆரம்பம் கொண்டு...
செயல்களை முந்திச் செய்து...
புரிந்தபின் புரியவைத்து...
ஜெயிக்கவிட்டு ஜெயித்து...
ஒன்று பட்டு உழைத்தால்
பத்தும் பத்தும் இருபதல்ல
அதற்கும் மேல் என்பதறிந்து...
வெற்றிகளை நோக்கிய பயணத்தில் கத்திகளை
வெல்லும் கூர்மையான புத்தியும்
ஆகிய ஏழு ஸ்வரங்களின்
இனிய ராகங்களில்...
புத்தாண்டின் புத்தொளியில்...
வழிகளும் வானமும் வசப்படும்...
வசந்த விடியல்களில்
முட்களும் பூக்கட்டும்...
மிரட்டும் வெள்ளத்துக்கு
அணைகள் உண்டு...
உருகும் உள்ளத்திற்கு
அணைதான் ஏது...
மனம் கனக்கிற போதெல்லாம்
சினம் தவிர்த்த அன்பு
இலவம்பஞ்சாய் இலேசாக்கும்...
இனிக்கும் புத்தாண்டு...
ஊன்றப்படும் விதையல்ல..
அது நடப்படும் நாற்று...
கண்களில் தெரியும் வளர்ச்சி...
அறுவடைகளில் தெரியும் மகிழ்ச்சி
ஆல் ஆப் யூ எவெரிபடி
விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நட்புடன்...
அன்பன் ஆர்.சுந்தரராஜன்...
😀🙋🏻♂👏🙏🎂🍰🌷🌹