காதல் வலி
அவன் என்னைப் பார்த்த
அந்த முதல் பார்வையில்
என்னை மறந்தேன் நான்
என் வசம் இழந்தேன் -என்னை
என் பார்வையால் முழுவதும்
அவனிடம் கொடுத்தேன் -என்
இதயத்தை திறந்தேன் அவன்
கண் பார்வையால் வீழ்த்திய
காதலை என் இதயத்தில்
அமுதாய் நிரப்பிவைத்தேன்
இது முதல் பார்வை தந்த
காதல் என்றே நினைத்தேன் ,
என்னையும் என்னை அறிந்தே
அவனிடம் தந்தேன்அவன்
காதலுக்கு காணிக்கையாய்
அவன் தந்த முத்தங்கள்
அவன் கட்டிப் பிடித்து
என் காதிற்குள் மொழிந்த
காதல் வார்த்தைகளில் என்னை
மறந்தே ஒரு காதல் வானம்பாடியாய்
விண்ணில் மிதந்தேன்
இன்று என்னால் நம்ப முடியவில்லை
என்னவன் இவன்தான் என்று நினைத்த அவன்
காரணம் ஏதுமிலாது என்னை சாடினான்
விடம் கக்கும் அம்புபோல் வேண்டா
வார்த்தைகளால் ஏதேதோ சொல்லி
'நம் காதல் இன்றோடு அஸ்தமித்து'
என்று சொல்லி என்னைவிட்டு பிரிந்தான்
நானோ திசை மாறி போன
பாய்மர கப்பலென சிதைந்து நின்றேன்
அவன் தந்த முத்தங்கள் அத்தனையும்
புண்ணாய் போய் என்னை துன்புறுத்துவதாய்
உணர்ந்தேன் , என்னுள் இத்தனை நாள்
நிரப்பிவைத்த காதல் அமுதெனும் பேழை
அவன் சொல்லால் உடைந்து சிந்தியதே
ஏமாற்றி போய்விட்டான் என் இதயத்தில்
நீங்கா நினைவுகள் தந்து அதில்
போகா காதல் வலிகளும் தந்து
அதை காலமுழுதும் சிலுவையாய்
நான் தாங்கிட எனக்கு அதுதான்
தக்க தண்டனையோ என்று !
அவன் 'ஆண். ஓடிவிட்டான்
கேட்பார் யாருமில்லை-யார்
தருவார் தண்டனை அவனுக்கு
அந்த ஆண்டவன் தான் என்று
நிச்சயமாய் நம்புகின்றேன்
அந்த நம்பிக்கையில் காலம்
இன்றும் கழிக்கின்றேன்