காதல் நதி
காதல் நதியே...
காதல் நதியே...
மனதிலே சிறுசிறு துளியாய் நின்றாய்
புன்னகை கப்பலை தலையில் சுமந்தாய்
இதயம் மலரும் வாய்ப்புகள் தந்தாய்
மீனைப் போல அன்பினை வளர்த்தாய்
கடலைப் போல உயிருடன் கலந்தாயோ...
என்னுயிரில்
நீயென்று சொல்வதை மெய்தான் என்றாயோ!!
பகல் நிலவே...
பகல் நிலவே...
ஒரு காதலின் வலியில் சுகமிருக்கு
மேகதைப் போல நானுன்னை மறைப்பதற்கு!!
மின்னலை போலொரு பார்வை இருக்கும்
மின்சாரம் போலிரு கண்கள் இருக்கும்
என்னுயிரை ஈர்க்கும் கண்கள்...
சிரிப்பொலி காதினில் தேனை ஊட்டும்
சிவக்கின்ற கண்ணங்கள் மேன்மை கூட்டும்
நானுனை காணும் பொழுதில்
பனியும் வெப்பமாகும்!
காதலில் வென்றிட உயிரும் இங்கே
மனதிற்குள் சிறைக்கொண்டு வாடுது அங்கே
நீயில்லாமல் அவ்வுயிரும் வாடுதே...
வாடுதே...
பொய்யென்று இல்லாமல் காதல் இல்லை
பொக்கிஷம் போலவே காதல் எல்லை
அதைக் காண வேண்டாம் உயிரே...
காலத்தை கடந்திட காதல் ஓடும்
காதலின் கைகளை பிடித்திடத் தோன்றும்
காதல் எந்தன் கையை
விட்டால் எங்கே செல்ல...
அழகினை கண்டு தோன்றிடும் காதல்
இறுதியில் இதற்குத் தோன்றிடும் மோதல்
மோதலில் காதல் செய்வதும் கலைதான்...