புத்த பிரான்

பிறந்தான் ஓர் குழந்தை ஆர்பரிக்கும் பெளர்ணமியில்,ஐயிராவதமேறி மாயவதிக் கருவழியே ......
அரசன் அகமகிழ ....நேப்பாளம் கொண்டாட ...
ஆசையைத்துறப்போனுக்கு ஆசை ஆசையாய்
வைத்தார்கள் பெயர் சித்தார்தனென்று.....
அகவிடும்பை யொழிக்க சிந்தனை செய்தோன்..!
புறவாழ்க்கையரியாமல் சிங்காதன கூடினுல்லே....
காலம் தோன்றியது கூடைவிட்டோடிவந்தான் முன்கானா காட்சிகயெல்லாம் ஆரறிவு ஜீவராசி,
துன்பங்கள் விடுபடவே சித்தார்தன் கண்களுக்கு காத்திருந்தனவே....!
தள்ளாடும் முதிர்கிழவர், நோயாளிபடும் துன்பம்,
அழுகிக் கொண்டிருந்த ஓர் பிணம்
உற்பாத நிலைக்காரணாமறியோன் அரச வாழ்வை துறந்திட்டான்...!
இடும்பைக்காரணமறிய புரப்பட்டான்...!
புரிந்திட்டான் தவம் போத்-கயாவில்
இவ்வண்ட இருளைப்போக்க பிறந்தது ஞானவொளி ..... அது இவ்வுலகம் கண்டிராத புத்தொளி .... புத்தொளியில் வெப்பத்தில் நிர்வாணமடைந்திற்று அவர் மனம் ....!ஆசைத்துறந்தால் இனியெல்லாம் சுபம்....!
விழித்தெழுந்து ஒளிப்பெற்றார்,அகவிடும்பைக்கு விடைகொடுத்தார், உலகம் புத்துண்ர்ச்சி அடைந்திடவே தோன்றியவர்தான் “புத்தபிரான்”
-விக்னேஷ் குமார்

எழுதியவர் : விக்னேஷ் குமார் (18-Feb-18, 8:59 pm)
பார்வை : 92

மேலே