மங்கையர் தின வாழ்த்துக்கள்

அன்பு சிநேகிதிகளுக்கு...

தரணி பார்த்த தாரகையே
தூரிகை தீட்டா ஓவியமே
போராடும் வர்கத்தின் பிரதிநிதியே
கொஞ்சம் இளைப்பாற கற்றுக்கொள்

நில்லாமல் சுழலும் நாயகிகளே
இல்லம் சிறப்பிக்கும் இல்லத்தரசிகளே
சமையல் கலை வல்லுநர்களே
பன்முகம் திறமைகளின் வித்தகிகளே
வீட்டில் பரிவுகாட்டும் செவிலியர்களே
பொருளாதாரம் மேம்படுத்தும் பணியாளர்களே
செவிசாய்க்கும் சிநேகிதியே
பரிணாமங்கள் பல கண்டீர்
அவதாரம் பல பூண்டீர்

வாழ்வின் நீண்ட பயணத்தில்
நீயும் ஓர் அங்கம்
உன்னை நேசிக்க மறவாதே
உன்னக்காக நேரம் ஒதுக்கு
உரக்கம் தெய்வக்குற்றம் அல்ல
தயங்காமல் தூங்கி ஏழு
பிடித்ததை செய்ய தயங்காதே
பிள்ளைகளை தாண்டிய உலகம் பார்
பிள்ளையில்லா உலகமும் உண்டு
வாழ்ந்து பார்

ஒப்பனையில்லா தேகம் அழகு
அங்கும் இங்கும் தெரியும்
நரை மயிர் பேரழகு
கண்ணில் கருவலயம் தனி அழகு
தேகத்தில் ஏற்ற இறக்கங்கள்
வளர்ச்சியின் அடையாளங்கள்
உன்னை அப்படியே விரும்பு
தழும்புகள் முயற்சியின் வெளிப்பாடு
வாழ்க்கையை ரசிக்க பழகு

சீரியல் கதாநாயகிகள் போல
ஆடுகடுக்காய் சோதனைகள் வரலாம்
ஹாலிவுட் கதைகளை போல்
சாதிக்க சோதனைகள் தடைகலே
என்பதை புரிந்துகொள் கண்ணே
வெற்றியுற வயது தடையல்ல
சாதிக்க பிறந்தவளே...
சட்றே இளைப்பாறு

அனைவர்க்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (8-Mar-18, 12:57 pm)
பார்வை : 568

மேலே