காதல்தலைவி தோழியிடம் கூறுதல்

நான் வேதியர்க் குலத்துப் பெண்
வெண்மை நிறத்தவள், அழகி என்றே
என்னை எல்லோரும் கூறி அழைப்பர்
வீட்டிலும், வெளியில் என் தோழியரும்
என் காதலன், என்னவன் ஆயர்குலத்தான்
கண்ணனைப்போலவே கரியநிறத்தான்
கார்குழலான் புன்சிரிப்பால் என்
சிந்தைக் கவர்ந்தோன், என் உள்ளத்தை
கண்ட முதல் நாளிலேயே கவர்ந்துசென்றான்
அன்று குழலூதி குழலிசையால் கன்றுகளை
தன காலடியில் மயங்கவைத்த ஆயனைப்போல்
அவனுடன் பழகினேன், அவன் குணகுன்றென
அறிந்தேன் , இன்று என் உள்ளமெல்லாம் அவனிடம்
அவனறிவானோ நானறியேன் ஆயின் அன்று
அந்த கோதை அரங்கனிடம் கொண்ட காதல்போல்
நான் அவன் காதலன்,ஆயின் அவன் என்னைக்
காதலியாய் ஏற்று மணமாலை இடும் நாள்
அவன் உள்ளத்தில் எனக்கோர் இடம் தரும் நாள்
எப்போதோ என்று கனவுலகில் உலாவிவருகின்றேன்
என் கனவும் பலிக்குமோ சொல் என் தோழி .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-18, 7:39 am)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே