பெண் போலீசை ரசித்த கண்கள்

பொலிவியன் படம்.
மொழியா முக்கியம்.
அவள் சுடும் அழகு
ஓடும் அழகு
காப்பியம் சொல்லும்
காவியக் கண்கள்.
பேசிக்கொண்டே
எதிரிகள் கணித்து
எகிறிடும் சாமர்த்தியம்.
கலையாத உடுப்பில்
மனம் கவரும் நுட்பம்.
கற்பனை படம்தான்.
கற்பனை கவிதையும் கூட.
இருப்பினும் என்னால்
என்ன செய்ய முடியும்?
பாடாய் படுத்துகிறதே
இந்த தலைப்பும்
மாலையில் பார்த்த
அந்த போலீசும்.
அந்த பார்வையும்.
உடுப்பு தாண்டி
மலர்ந்த சிரிப்பும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (25-Apr-18, 6:09 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 200

மேலே