உன் நினைவுகள்

மனக்கிணற்றின் சுனைகளில்
உன் நினைவுநீர்
ஊறிக்கொண்டே இருக்கிறது.
என் காதல் தாகமோ
தீரவேயில்லை!
வீட்டிற்கு வந்ததும்
அறைக்கதவை
பூட்டிக்கொள்கிறேன்!
நீயோ என் மனக்கதவை
திறந்து விடுகிறாய்!
உன் நினைவோ
மயக்கத்தை தந்துவிடுகிறது!
மரத்தின் கீழ்தான்
அமர்ந்திருக்கிறேன்
புத்தனைப் போல் அறிவை
பெற அல்ல!அழகியே
உன் நினைவின் ஆழத்தில் விழ!
உன் நினைவு
சிற்றோடையின்
ஓசையாய் என் செவியை
அடைந்ததும்
கண்களை இறுக மூடி
காதல் ராகம் பாட விழைகிறேன்!
உன் நினைவு எனக்கு
மருந்தா இல்லை விருந்தா?
காதல் நோயும்குறையவில்லை
மனப்பசியும் ஆறவில்லை!