எல்லாம் அழகு

தாயின் கருவில் இருந்து பூக்கும் பூவாய்
பூமியை முட்டி மோதி எட்டி பார்க்கும் நெற்கதிர் அழகு
கள்ளனாய் வந்து நிலவின் மேல் காதல் கொண்டு
அதை காணாமல் தவிக்கும் கதிரவன் அழகு
இளம் தென்றல் வீச ,பூக்கள் மொட்டு விரிக்க
கூவும் சேவல் அழகு
மாக்கோலம் இட்டு மணவாளன் துயில் எழுப்பி
மாட்டிற்கு தீவனம் வைக்க செல்லும்
எம் மங்கையர் அழகிலும் அழகு
கதிரவன் கண்தோன்றும் முன்னே
களத்துமேட்டுக்கு சென்று வியர்வை தனில் குளித்து
ரெட்டை ஜடை மகளின் எதிர்காலம் நினைத்து
உழைக்கும் தகப்பன் அழகு
பருவம் வந்த பிறகு அழகிய மலராய்
வெட்கம் மலரும் பெண்மை அழகு
தெரியாத இடத்தில தன்னவனுக்காய்
தகப்பனை பிரிந்து கண்ணீரோடு போகும்
மணப்பெண் அழகு
தாய்மை அடைந்து உதிரம் சிந்தி இன்னொரு உயிரை
ஈன்று எடுக்கும் எல்லாப்பெண்ணும் அழகிற்கெல்லாம் அழகு ...

எழுதியவர் : ஹேமாவதி (14-May-18, 12:36 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : ellam alagu
பார்வை : 1576

மேலே