பெளர்ணமி தெரியுமா

நிலா...!
தெரியுமா...?
வட்டமாய் விண்ணில்;
என்றுமே
பிறையென்று
தேய்வதுமில்லை
முழுநிலவாய்
வளர்வதுமில்லை
அவளுக்கான
என் காதல் போல...
பிழையெல்லாம்
கண்களில்...
இயற்கையில் ஏது...?
இன்பத்தின்பால் ஏது..?
தேய்வதும் வளர்வதும்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (8-Jun-18, 10:24 pm)
பார்வை : 213

மேலே