தேயிலைத் தோட்டத்துப் பிரதம லிகிதர் செய்த கொலை

கொழும்பு – அவிசாவலை- ரத்தினபுரி ஊடாக சுமார் 100 கி மீ தூரம் பயணித்தல் கினிகதென (Ginigathena) வில் உள்ள கெனில்வேர்த் (Kenilworth) தேயிலை தொட்டத்தை அடையலாம் . சிவனொளி பாதை மாலையில் இருந்து உருவாகும் களனி கங்கை, கடல் மட்டத்துக்கு 3000 அடி உயரத்தில் உள்ள இந்த தோட்டத்தைத் தழுவி ஓடுகிறது வருடத்துக்கு 2 மில்லியன் இறாத்தல் தேயிலையை இந்தத் தோட்டம் உற்பத்தி செய்கிறது. வருடத்துக்கு 190 அங்குலங்களுக்கு இத்தோட்டத்தில் மழை பெய்கிறது. கெனில்வேர்த் தொட்டத்தில் மழையிலும், குளிரிலும், அட்டைக்கடியிலும் , முதுகில் கூடையை சுமந்தபடி கொழுந்து பறிக்கும் பெண்கள், தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள், தேனீரை சுவைத்துப் பார்த்து தரம் பிரிப்பவர் ( Tea Taster),
தொட்டத்தை பிராமரிப்பவர்கள் . பாதுகாப்பவர்கள், கண்காணிகள், தோட்டத்தை பரிபாலனம் செய்யும் பிரதம லிகிதர், அவருக்கு உதவியாக லிகிதர்கள் , கணக்காளர், உதவி சுபீரிண்டேண்டன் (சின்ன துரை) , சுபீரிண்டேண்டன் (பெரிய துரை) ,இப்படி சுமார் 1௦௦௦ பேர் அங்கு வேலை செய்கிறார்கள் . பிரிட்டிஷ்காரரான ராபர்ட் அந்த தோட்டத்தின் பெரியதுரை. அடிக்கடி வரவு செலவு கணக்கை மேற்பார்வை பார்த்துக் கொள்வார். வீணாக செலவு செய்யமாட்டார், அனுமதிக்கவும் மாட்டர்.
ராபர்ட் துரையின் பெருந தன்மை தனக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களின் ஆதரவை பெறுவது. அடிக்கடி அவரகள் வசிக்கும் லைன் வீடுகளுக்குச் சென்று பார்த்து, தேவையான வசதிகள் செய்து கொடுப்பார்.மற்றைய தொட்டத் துரைமார் போல் அல்லாது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அன்பைப் பெற்றவர். தோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவுக்கு மனைவி ரீட்டா வோடு போய் கலந்து கொள்ள தவறமாட்டார் . இவள்ளவு நல்ல மனம் படைத்தவருக்கு பிள்ளைகள் இல்லை . தொடத்து பிள்ளைககுக்கு சனி ஞாயிறுகளில் இரு மணி நேரம் ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பாள். ராபர்ட் பண விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர்

அன்று தொட்ட கணக்கை ராபர்ட் மேற்பார்வை செய்த போது கணக்கில் 2000 ரூபாய்கள் குறைவாக இருந்தது.
உடனே பிரதம லிகிதர் ராமலிங்கத்தை தன் அறைக்குள் ராபர்ட் அழைத்தார் .
“ என்ன மிஸ்டர் லிங்கம் கணக்கில் 2000 ரூபாய்கள் குறைவாக இருக்கிறதே . நீர் எடுத்தீரா?. உண்மையை சொல்லும்” ராபர்ட் பிரதம லிகிதர் ராமலிங்கத்தை கேட்டார். ராமலிங்கத்துக்கு தெரியும் பெரிய துரைக்கு பொய் சொல்வது பிடியாது என்று.
“ ஆம் சேர் என் மனைவியின் வைத்திய செலவுக்கு தேவை பட்டது. அதனால் எடுத்தேன். என்னை மன்னித்து விடுங்கள் “
வழக்கத்தில் இப்படி செய்த தவறுக்கு ராபர்ட் அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவார். அவர் பணம் எடுத்தது அவரின் மனைவியின் வைத்திய செலவுக்கு என்ற படியால் அவரை வேலையில் இருந்து ராபர்ட் நீக்க வில்லை .
“சரி லிங்கம் நீர் பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி வைக்க வேண்டும். இது கொம்பனி பணம். வைக்கத் தவறினால் அதன் விளைவுகளை நீர் சந்திக்க வேண்டி வரும்” என்று எச்சரிக்கை செய்து லிங்கதை அனுப்பினார்..
****
ஒரு மாதம் முடிந்த பின் ராபர்ட் லிங்கத்தை தன் அறைக்கு கூப்பிட்டு “ என்ன லிங்கம் எப்படி இருக்கு உம் மனைவியின் தேக நிலை . அது சரி . பணம்கொண்டு வந்தீரா”? என்று கேட்ட. ராபர்ட்டுக்கு தெரியாது லிங்கம் தனது கோட் பாக்கெட்டுக்குள் ஒரு ரிவோல்வர் கொண்டு வந்திருக்கிறார் என்று. ஏதோ பணத்தை எடுப்பது போல் பாவனை செய்து தன் கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு ரிவோல்வராய் எடுத்து பெரியதுரையை நோக்கி லிங்கம் சுட்டார் . ராபர்ட் துரை அதை எதிர் பார்க்கவில்லை. “லிங்கம் நீ இப்படி என்னை சுடலாமா. நான் அந்த பாணத்தை ....என்று பேசி முடிக்க முன் இரண்டாம் தடவை ராபர்டை துரையை சுட்டு, தன்னையும் லிங்கம் சுட்டுக் கொண்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்தவர்களும், ராபர்டின் மனைவியும் போய் வந்து பார்த்தபோது இரு உடல்கள் இரத்த வெள்ளத்தில் நிலத்தில் கிடந்தன. ராபர்டின் மனைவிக்கு செய்தி போனதும் அவளும் உடனே வந்தாள்.
போலீஸ் சில நிமிடங்களில் வந்து பார்த்த போது கீழே கிடந்த பெரியதுரை ராபர்டின் கோர்ட் பொக்கட்டுக்குள் இரண்டாயிரம் ரூபாய்கள் இருந்தன. பொலீசுக்கு அந்தப் பணம் எதற்கு ராபர்டின் கோர்ட் பாக்கெட்டில் இருந்தது என்று புரியவில்லை. ராபர்டின் மனைவி ரீட்டாவை விசாரித்த போது அவள்,
“காலை தன்னோடு ராபர்ட் பேசியபோது மிஸ்டர் லிங்கத்தின் மனைவிக்கு கடும் வருத்தம் இருப்பதாயும் அதுக்கு டாக்டர் செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் லிங்கம் பணம் பாதுகாப்பாக வைக்கும் பெட்டியில் இருந்து தன் மனைவியின் வைத்திய செலவுக்கு எடுத்ததாக எனக்குச் சொன்னார். பாவம் இருபத்தையிந்து வருடங்களாக லிங்கம் இந்தத் தொட்டத்தில் வேலை செய்கிறார். ஏதோ அவசரத்துக்கு பணம் அவருக்கு தேவைப் பட்டது போல் இருக்கு. நான் என் பணத்தை கொடுத்து அவரை எச்சரித்து மன்னித்து விட இருக்கிறேன் என்று சொல்லிப் பணத்தைக் கொண்டு போனவர் தான் அதற்கிடையில் லிங்கம் அவசரப்பட்டு விட்டார்” என்று அழுதபடி திருமதி ரீட்டா ராபர்ட் போலீசுக்கு சொன்னாள்
“நல்லதை செய்ய போனால் அது சில சமயம் கேட்டதில் முடியும்” என்றார் பொலீஸ் இன்ஸ்பெச்டர் சில்வா .

****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (28-Jun-18, 9:51 pm)
பார்வை : 105

மேலே