ஏனோ தெரியவில்லை

காதலியாய்
நீ தொலைவில்
இருந்தபொழுது
உறங்காது
விழித்திருந்தேன்
உன்னை நினைத்து
மனைவியாய்
நீ
என்னருகில்
துயில் கொள்ளும்
வேலையிலோ
விழித்திருக்காது
இமை மூடி
கண்ணுறங்குவதேனோ?
தெரியவில்லை!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (1-Jul-18, 2:00 pm)
Tanglish : eno theriyavillai
பார்வை : 456

மேலே