கனவு

அதிகாலையில்
ஒரு கனவு

என்னவளுடன்
நான் உலாவுவது
போன்று ஒரு கனவு
என் கண்களுக்குள்
உலா வந்தது

அது என் எண்ணத்தின்
ஆவலாக கூட இருக்கலாம்

விழித்துக் கொண்டேன்

கனவு பலித்தது

என்னவளின் நினைவுகளுடன்
நான் உலாவத் தொடங்கினேன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (12-Jul-18, 7:44 am)
Tanglish : kanavu
பார்வை : 75

மேலே