உன் நினைவுகள்

நான் பார்த்த விழிகளை
நன்றாக பார்த்துக்கொள்
நாளை என்றாவது நான்
பார்த்தால் என்னை பார்ப்பது
உந்தன் விழிகள் மட்டுமே!

இனியொரு ஜென்மம் எடுத்தாலும்
உன்னையே தேடி வருவேன்
உன் நினைவுகளின் சுவடுகளால்!

உன்னை சந்திரனுடன் ஒப்பிட்டதாலோ! என்னவோ?
சந்திரகிரகணம் ஆகிப்போனது
என் வாழ்க்கை!

கண்காணாமல் போனாலும்
கண்கட்டி வித்தை காட்டுகிறது
உன் கண்கள்!

நிஜத்தை விட நினைவுகளிலே
அதிகம் வாழ்கிறேன்
என்னவளின் நினைவுகளால்!

நீ என்னை விட்டுச்
சென்றாலும் உன் நினைவுகள்
என்றும் என்னுடையதே!!!

எழுதியவர் : மிது (23-Jul-18, 9:30 am)
சேர்த்தது : மிது
Tanglish : un ninaivukal
பார்வை : 464

மேலே