அவள்......!!!!!

அவள் பாதச்சுவடுகளில் எல்லாம்
தேனிக் கூட்டம் மொய்க்குது
அட என்னத்தச் சொல்ல
அவள் பாத்தாக்கா
பாலை வனத்திலும்
தேன் ஊத்து சுரக்குது
அவள் கைப்பட்ட இடமெல்லாம்
பாலேடு மிதக்குது
அவளுக்கு குடை பிடிக்கும்
மழை மேகம் கூட
சர்க்கரை பாகு பொழியிது
அவள் மேனி தொட்ட
மழை நீரும்
கற்க்கண்டாய் சிதறி ஓடுது
மொத்தத்தில் இனிக்கும்
பெண் அவள்
என் எண்ணத்தில்
காய்க்கும் கனி அவள்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 4:23 pm)
பார்வை : 72

மேலே