காதல்

இளமையில் சொக்கினேன், உன் அழகில் ,
மயங்கிப் போனேன்
ரதியே உன் பேரழகில்,
காதலித்தேன்,,.....நீயும் என்னை,
பருவங்கள் மாறின,
உருவத்திலும் மாற்றங்கள் ........................
நம் எண்ணங்களிலும் முதிர்ச்சி,..................
நம் தோற்றத்தில் ...............................
நிலைக்கண்ணாடி முன் நீயும் நானும்................
கண்ணே, இன்றும் நீ அழிகியே எனக்கென்றேன்
என் மனதிற்கினியவள் நீ, என் காதலி,
அன்றும்,இன்றும், என்றும் என்றேன்;
அன்றுபோல் அவள் தலைகுனிந்து
அதே புன்னகையுடன் ..........
ஆரா காதல் இது ...............
பருவங்கள் மாறலாம்
உருவங்கள் மாறலாம்
காதல் மாறாது...............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-18, 6:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 223

மேலே