நட்பு பேசும் வரலாறு
வரலாறு படைத்தது நட்பு
வரலாறு குடித்தது நட்பு...
ஒவையின் எழுதுகோலும்
அதியமானின் செங்கோலும்
இரண்டறக் கலந்து
இசை பாடும் நட்பு...!
ராமனின் வில்லழகும்
அனுமனின் சொல்லழகும்
வான் வரை பேசுகின்ற
வளர் பிறைதான் நட்பு
வள்ளுவரின் ஈரடியும்
நாலடியாரின் நல்வரியும்
நட்பை நாள்தோறும்
மீட்டுதடா இசை பாடி...!
நட்பின் வரலாற்றை
நானிங்கு சொல்லிவிட்டேன்...
இவ்வரியில் நீசேர
இடந்தரவா என்தோழா ...