தீர்மானம்
எதையும் ஏற்கும் சவக்குழி
வேகாத புலாலை மறுப்பது நியாயமாகுமா !
செய்த சூழ்ச்சியானது
மறு சுழற்சிக்கு துணைபோகாத துரதிச்டமே
மண் புழு கொட்டாவி விட்டு முகம் சுழிக்க......
செய்தொழில் சுத்த பத்தம் அறிந்தது
சொந்தங்கள் சிபாரிசு......
வசதி வாய்ப்பை மிகவே உறுதிபடுத்த
அந்தரங்க சேர்க்கை அணை போல் குவிகிறது......
ஊர்வலம் !
எதிர்கொண்டு நடப்பதுவூம்
நால்வர் வாய் மொழிய
வசதி வாகனம்
தொலை நோக்கு சம்பிரதாயம்
திருவாய் பொழிந்து
தீர்மானம் சபித்தது
திடுக்கிடும் தகவல்
சாய்ந்தது குடை
மழை நீர் படாமலே !