முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

மொட்டுவிட்ட மல்லிகைகள்
மலர்ந்து மணம்பரப்பியபின்
பச்சைச்செடியின் வேரை கிள்ளி
பதியம் போட்ட இடம்

கைத்தடிக்கு காசுதர மறுத்து
மரத்தடியில் விட்டுச்சென்ற
மாதா பிதாக்களின் காப்பகம்

கருவாக்கி உருவாக்கி
கனவுகளின் மாளிகைக்குள்
காத்தெடுத்த வாலிபங்கள்
வாழ்க்கையின் நிஜம் இதுவென்று
பொய்யுரைத்து விட்ட இடம்

தந்தையும் மகனும்
தாயும் மகளும்
தனித்தனியே பிரித்து
கந்தை வாழ்விற்குள்
மந்தை மாட்டில் ஒன்றாக
வாழ்கின்ற மானிடரே அறீவீரோ

எழுதியவர் : இளவல் (14-Sep-18, 3:37 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 58

மேலே