மன்மதன் துணை

கன்ன லின்மொழி கன்னி யுன்விழி
மின்ன லுன்னிடை மின்னு முன்னகை
கன்ன மென்பது பஞ்சு
**
அன்றி லின்வகை அன்பு நன்கொடை
ஒன்று தந்துனை ஒன்று மொன்றுட
னொன்று மென்றிட ஒன்று
**
இன்னு மென்னடி இன்ன லென்பது
இன்ப சம்மத மொன்று தந்திடு
மன்ம தன்துணை யுண்டு.
**