காதல்

லிப்ஸ்டிக் தடவா உந்தன்
மாதுளைப்பூப்போல் சிவந்த
இதழ்கள் என் இதழ்களை நாடி
மென்மையாய் உறவாட உன்
சுவாசமும் என்னுள் இறங்கிட
நான் என்னை மறந்து இன்பத்தில்
மிதக்க, உன் இதழ்கள் நான்
நினைக்கும் முன்னே என்
கன்னத்தில் சின்னம் தந்து
போனது .........அது நீ தந்த
நம் காதல் முதல் சின்னமாய்
என் மனதில் .....................

ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன
நம் மண வாழ்க்கையின் தங்க விழா
இன்று..............

என் மனதை நிறைப்பது இன்றும்
அன்று நீ தந்த அந்த முதல் முத்தம்
என் நெஞ்சில் சின்னமாய் விளங்குகின்றது
மலரும் நினைவாய் .................அது
என் மனதிற்கு நிறைவு என் உயிர் உள்ளவரை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Oct-18, 2:59 pm)
Tanglish : kaadhal
பார்வை : 187

மேலே