அந்த வெப்பம் போதுமடி நான் துளிர்க்க
![](https://eluthu.com/images/loading.gif)
உன்
நிழல் பெறா
என் கனவின்
ஏக்கப்பெருமூச்சு!
சுண்டுவிரல் நகத்தைக்
கடித்தபடி பார்க்கும்
உன் பேய்மழைப் பார்வையின் ஊடே
என்னைத் துளைத்த
அந்தத்
துளி விசப் புன்னகை!
நீ
இல்லா தருணங்களில்
என்னைக்
கூறுபோட்டுக்
கொன்றுகுவிக்கும்
தனிமை!
இவையனைற்றையும்
அள்ளி
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நிறைக்கிறேன்!
என்
பெருங்காதலின்
சல்லி வேர்களைச்
சுள்ளிகளாக்கித்
தீ வளர்க்கிறேன்!
அந்த வெப்பம்
போதுமடி
நான் துளிர்க்க....
அந்த வெப்பம்
போதுமடி
நான் துளிர்க்க....