கழுமரங்கள் பூத்த போது

கழுமரங்கள் பூத்த போது...
============================================ருத்ரா

இதோடு
அந்த கம்பியில்
எத்தனைக்கடிதங்களை
செருகியிருக்கிறேன்?
அவள்
விழிகளின் இலக்கியப்பூக்கள்ளின்
செறிவில்
சிக்கியிருந்த‌
என் பார்வை ஒன்று
திரும்பி வரவே இல்லை.
அது தான் காதலா?
தெரியவில்லை.
அடியில் புதைந்த அந்த‌
தீக்கங்கை ஊதி ஊதி
அவளுக்கு
கவிதைகளில் கடிதங்கள்..
கடிதங்களில் கவிதைகள்..
அந்த கம்பி நிரம்பிவிட்டது.
ஆம்
திருப்பி அனுப்பிய‌
பத்திரிகைகளின்
என் படைப்புகள் போல்..
அந்த கழுமரம்
என் இதயங்களை வரிசையாய்
குத்தி குத்தி..
கண்கள் என்றாலும்
புண்கள் என்றாலும்
அது அமுதவானங்களின்
வாசல்கள் அல்லவா!
திடீரென்று
கம்பி விழுந்து காகிதங்கள்
சிதறின.
திரும்புவும் குத்தி வைக்க முயன்றேன்.
திடுக்கிட்டேன்.
ஆயிரம் இமயங்கள்
என் மீது அந்த இன்பச்சுமையை
கொட்டிக்கவிழ்த்தது போல்..
ஆம்.
ஏதோ தவறுதலாய்
அந்த கடிதங்களை திருப்பிவைத்து
குத்தி வைத்துக்கொண்டிருந்தவன்..
ஒரு காகித்தில்
அவள் எழுத்தைப்பார்த்தேன்.
ஐ லவ் யூ டூ என்று..
எல்லா கடிதங்களிலும்
அதே தான்.
ஆனால்
ஐ டூ,ஐ டூ...என்று.

================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (21-Oct-18, 10:40 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 29

மேலே