அகதி

*********
தாய்தேசம் விட்டு அகதியாய் வந்து
தனியே பட்டு அலையாய்
வருந்தி
தாய் மண்ணை நினைத்து
பார்க்கையிலே
தங்கமும் மனம் உடைந்து
போகுமே
உயிர்தந்த மண்ணில் உயிராக
வாழும்போது
உயிரையும் பறித்து துன்பத்தையும் உரசவைத்தே
நித்தமும் அமைதி உடைந்து
கொள்ளும்போதே
அம்மாவும் ஓடியே வந்து சொன்னாலே
அவசரமாக பயணம் போ வெளிநாட்டுக்கு
பாதியிலே பயணம் முடிந்துபோகுமே இங்கேயென்று

எழுதியவர் : அகிலன் ராஜா (8-Nov-18, 12:17 am)
Tanglish : agathi
பார்வை : 62

மேலே