பிறந்தநாள் வாழ்த்து

முத்தமிழும் சொந்தமென உன்னைச் சுட்ட
***முக்கனியின் சுவையினைநின் படைப்பு வெல்ல
முத்தான பாக்களினால் நெஞ்சை யள்ளி
***முழுமதியாய்க் கவிவானில் உலவும் உன்னை
முத்தய்யா முந்திவந்து வாழ்த்து சொல்ல
***முப்பாலைத் தந்தோனும் ஆசி கூற
முத்தமிட்டுத் தமிழன்னை அணைப்பாள் அன்பாய்
***முல்லைப்பூ புன்னகையால் ஏற்பாய் இனிதே !!!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்கு

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Nov-18, 1:01 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 45

மேலே