சிந்திக்க வைத்த சிறுவன்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை
சிந்திக்க வைத்த சிறுவன் !
கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்
வடலூர் வள்ளல்பெருமானை
வணங்கும் சிறுவன்
வாஷ்பேசனில்
தன் கை கழுவாமல்
திரும்பி வந்தான் !
வாஷ்பேசனுள்
ஊர்ந்து கொண்டிருந்தது
ஒரு சிற்றெறும்பு !
பூ. சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்