மலரும் பெண்ணும்

மலரும் பெண்ணும்

புலரும் காலை புதுவரம் வேண்டி
மலரும் மலரும் மணம் இங்குவீசி
சிலரும் கொய்வார் சிர மணம் வேண்டி
பலரும் கொய்வார் தினம் பணம் வேண்டி

மணமும் பரவ மனமும் மகிழ்வர் மங்கையர் மலர் சூடி
இணையும் காதலர் இதையே கொடுப்பார் காதலின் மொழி கோரி
வண்டும் வலம் வரும் வாசம் கொண்ட மகரந்த சூல் தேடி
பெண்டு பிள்ளையை பூலோகம் அழைக்கும் பூவையர் எனக்கூறி

இருகப்பிடித்தால் இதழும் உதிர்க்கும் மென்மை உடல்தானே
இதமாய் எடுத்து நுகர்ந்து பார்த்தால் இன்பம் அதுதானே
மென்மை என்பதே உண்மை என்று உரைக்கும் உலகுக்கு
பெண்ணையும் உன்னையும் மென்மையாய் அணைப்பதே பெருமை நமக்கிங்கு

வீசும் காற்றில் நடனம் ஆடும் நாளும் அழகாக
பேசும் பெண்ணின் இதழ்கள் போல மிளிரும் இதமாக

பூவும் பூவையும் ஒன்றே என்று உணர்வோம் நலமாக

எழுதியவர் : இளவல் (17-Nov-18, 9:39 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : malarum pennum
பார்வை : 342

மேலே