தமிழ் அழகு

ஞாயிறு போற்றும் திலகழகு
தமிழ் மேன்மையில்!
ஓடும் நதிய ணிந்த உடையழகு
தமிழ் எழுத்தில்!
விழிஒத்த புவியீர்ப்பு விசையழகு
தமிழ் ஈர்ப்பில்!
மதி மயங்கும் முகமழகு
தமிழ் கவியில்!
பசுமை நிறைந்த மலையழகு
தமிழ் சொல்லில்!
சடுதியாய் நெளிந்த மின்னலிடையழகு
தமிழ் வடிவில்!
அணையா அனலின் அழலழகு
தமிழ் இலக்கணத்தில்!
கிளைதாங்கி வழுக்கும் வாழையழகு
தமிழ் யாப்பில்!
அணிகளானாய் மருதாணி நடையழகு
தமிழ் அணியில்!
ஆதி அந்தம் முற்றும் சுகமழகு
தமிழ் பொருளில்!
பெண்ணழகு போற்றும் பேரழகு
தமிழ் மொழியில்!

எழுதியவர் : செல்வகுமரன் (21-Dec-18, 2:12 pm)
சேர்த்தது : Selva Kumaran
Tanglish : thamizh alagu
பார்வை : 286

மேலே