ஊடலுக்கு பின் கூடல் சுகமாமே

நெஞ்சக் கூட்டில்
சிறகடிக்கும்

பறவையாய் மனம்
பட படவென அடிக்க

வழி மீது விழி
வைத்து

உன் வருகைக்காக

உனக்கான உலகம்
பரந்து விரிந்தது

நீ மட்டுமே என்
உலகம் என்பது

உனக்கு தெரியாதா

மரங்கொத்திப்
பறவையாய்

என் மனம்கொத்தி
விட்டு போனாய்

காயம்பட்ட மனதோடு
காத்திருக்க

ஆறுதல் சொல்ல
ஆளின்றி

தனிமையில் நான்

ஏ வெண்புறாவே என்
இதயதுடிப்பு

கேட்கவில்லையா
உனக்கு

நீயாவது போய்சொல்

என் காதல் உண்மை
என்று

பொய்கோபம்
என்னுடையது

அதுதன் வேடத்தை
கலைத்துவிட்டது

என்று எனக்காக

நீ பேசுவாயா
சிட்டுகுருவியே

ஊடலுக்கு பின்
கூடல் சுகமாமே

அதைநான் பெற

எனக்கு உதவுவாயா
தேன்சிட்டே

மீன்கொத்தியாய்
வந்து
கொத்திகொண்டு
போக

நான் காத்து
இருப்பதை

சொல்லி விட்டு
வாயேன் நாரையே

எழுதியவர் : நா.சேகர் (21-Jan-19, 10:03 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 376

மேலே