நாட்டுப்புறக் கவிதை கவிஞர் இரா இரவி

நாட்டுப்புறக் கவிதை ! கவிஞர் இரா .இரவி !

கொசுவம் வைத்த குமரிப்பெண்ணே
கொஞ்சம் இங்கே வந்து நில்லடி !

மச்சான் இங்கே காத்து இருக்கேன்
மனசை உன்னிடம் தந்து விட்டேன் !

கம்மாக்கரையில் பேசிமகிழ்ந்து நாளாச்சு
கன்னிப்பெண்ணே கொஞ்சம் மனசு வையடி !

கரும்புத் தோட்டம் விளைஞ்சு நிக்குது
கனிந்து வந்தால் இனிமை இருக்குது !

அடிக்கடி உன்னைப் பார்க்க முடியலை
அடிக்குது மனசு மணியைப் போல !

இடுப்பை ஆட்டி நீ நடக்கையிலே
என்னவோ செய்யுது என் மனசிலே !

ஆசைப் புள்ளே ஆழகுப் புள்ளே
அன்பு காட்டும் செவத்தைப் புள்ளே !

கதிர் போல விளைஞ்சு நிக்கிறே
காளை எனக்கு பொருத்தமா இருக்கிறே !

சோளக்காட்டுப் பொம்மை போல நிக்கிறேன்
சுகம் காட்ட வாடி புள்ளே வயலுக்கு !

குவித்து வைத்த நெல்லு அப்படியே இருக்கும்
குறி போட்டு வைத்தால் மாறாதிருக்கும் !

நல்லவங்க வாழ்கின்ற நம்ம ஊரு
நாமும் கரம் சேர்த்து வாழ்ந்திடலாம் !

இருமனம் இணைந்து வெகு நாளாச்சு
திருமணம் புரிந்திடுவோம் வா புள்ளே !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Feb-19, 9:18 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 74

மேலே