காதல்

* கண்ணோடு கயலாட ஆட
காதோடு குழலாட ஆட
விண்ணோடு முகிலாட ஆட
நிலவோடு விண்மீன்களாட
காற்றோடு தேன் மலராட
என்னவளே என்முன்னே
கோலமயிலாய் நீயாட
என் மனதில் கவிதைப் புனலாய்
பொங்கி விளையாடுதே என்மனதில்

(* கவி கவின் சாரலன் கவிதையைப்
படித்ததனால் மனதில் வந்த வரிகள்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Feb-19, 8:04 pm)
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே